புறக்கணிப்பையும் ஏற்றுக்கொள்ளுங்கள்!!!! எதுவும் நன்மைக்கே...
புறக்கணிப்போ, விட்டு விலகுதலோ ஏற்படும் போது அதை ஏற்றுக்கொள்ளும்
மனபக்குவத்தையும் பெற வேண்டும்... தன்னம்பிக்கையுடன் அதை கை நீட்டி வரவேற்க
வேண்டும்... நமக்காக இல்லாமல் தேவைக்கு நம்மை நாடும் சிலரின் அன்பை
புரிந்துக் கொள்ளும் சந்தர்ப்பமாக அறிந்துக் கொள்வேமே.... அவையே நம்மை
நன்முறையில் செதுக்குபவை.. எப்போதும் எல்லா இடத்திலும் நாம் மதிப்புடன்
கொண்டாடப்படும் போது... வாழ்கை சூழலின் மறுபக்கமும் , துரோகத்தின்
காட்சியும், வெறுப்பின் சூழ்ச்சியும், அகம்பாவத்தின் ஆட்சியும் அறிய முடியாமலே போய் விடும்...
புறக்கணிப்பும், வெறுப்பும் நம் மீது உமிழப்படுவது பலவீனம் அல்ல.. அது நம் மனபலம் அறியும் வாய்ப்பு ... அது நாம் அன்பானவர்கள் என்று எண்ணியிருந்த சிலரின் முகமூடியை தள்ளி விட்டு செல்லும் புயல் காற்று... அதை தைரியத்தோடு எதிர்க் கொண்டு ஏற்றுக் கொள்ளுங்கள்...
உறவோ, நட்போ நம்மை தேவைக்கும், நேரத்திற்கும் பயன்படுத்தி பிறகு புறக்கணித்து உதறி தள்ளுபவர்களை நாமும் புறக்கணிக்க கற்றுக் கொள்வோம்... .புரியாதவர்களிடம் தேடி சென்று வாடி நிற்காமல் ... விலகி நின்று வாழவும்,வாழவிடவும் அறிந்துக் கொள்வோம்... உண்மை அன்பை இழப்பதை விட அவர்களுக்கான மாபெரும் தண்டனை எதுவும் அளித்து விட முடியாது... புறக்கணித்தவர் முன் புகழோடு வாழுங்கள்... யாரிடமும் அதீத அன்பையோ வெறுப்பையோ காட்டாமல் உப்பை போல அளவோடு பழகுங்கள்... நம் அன்பை முழுமையாக அறியாதவரிடம் காட்டும் போது அது கடலில் இட்ட சர்க்கரை போல பலனை அறிய முடியாது போய் விடும் ... ஆகவே புறக்கணிப்பவர்களை புறம் தள்ளி அளவோடு அன்புக்கொண்டு வாழவும் கற்றுக் கொள்வோம்...

No comments:
Post a Comment