தாழ்வு மனப்பான்மை ... அது என்ன தாழ்வு மனப்பான்மை .. எதற்காக தாழ்வு மனப்பான்மை ... தன் எடையை காட்டிலும் எட்டு மடங்கு எடையை தூக்கி கொண்டு சென்று வருங்கால வாழ்வுக்கு சேர்த்து வைக்கும் எறும்பிடம் இல்லை தாழ்வு மனப்பான்மை ... யார் உதவியும் இன்றி மிகச் சிறந்த பொறியாளர் போல கூடு கட்டும் சிறு தூக்கணாங்குருவியிடம் இல்லை தாழ்வு மனப்பான்மை .. எத்தனை முறை விழுந்து எழுந்தாலும் மீண்டும் தன் வலையை பின்னி முடிக்கும் சின்னஞ் சிறுசிலந்தியிடம் இல்லை தாழ்வு மனப்பான்மை ... பல்வேறு பூக்களில் இருந்து தேனை சேகரித்து தேன் கூட்டினை வடிவமைக்கும் தேனியிடம் இல்லை தாழ்வு மனப்பான்மை .. இவைகளுக்கு இருப்பது தன்னம்பிக்கை... இவைகளை விட பன்மடங்கு உடலும், உள்ளமும் பலம் வாய்ந்த மனிதர்களுக்கு ஏன் தாழ்வு மனப்பான்மை .. முடியும் என்ற வார்த்தைக் கொண்டு வாழ்க்கையின் வளர்ச்சிக்கு வழியை தேடுவோம்... இயலும் என்ற வார்த்தையால் இனிமையை கூட்டுவோம்... தன்னம்பிக்கை எனும் சுடர் கொண்டு தாழ்வு மனப்பான்மை எனும் இருளை மருள் அடைய செய்வோம்... பணமோ, பதவியோ, அழகோ எதும் நிரந்திரம் இல்லாத போது அதைக் கொண்டு தாழ்வு மனப்பான்மை ஏனோ... இருப்பதைக் கொண்டு சிறப்பு செய்து தனக்கென ஒரு திறமையை வளர்த்துக் கொண்டால் தாழ்வு மனப்பான்மை தலை கவிழ்ந்து ஓடுவதைக் காணலாம்...
No comments:
Post a Comment