அன்பின் வலிமை...அன்பின் வலிமை என்னவென்றால்.... பணம், பதவி, இனம், வயது, நிறம், நாடு இன்ன பிற என எதுவும் மறந்து நம்மை ஒரு குழந்தையாய் கூட்டுக்குள் அடைப்பதுதான்... உண்மை அன்பு எதையும் எதிர்பாராதது... அதற்கு உருவம் கிடையாது... உணர்வு மட்டுமே... அதற்கு தேடுதல் கிடையாது... திடிரென உள்ளுக்குள் ஊற்றாய் பெருகும்... அதற்கு முகவரியும் இல்லை... முகவுரையும் இல்லை.. முடிவுரையும் இல்லை... யார் மீது , எதற்காக, ஏன் என்ற பதங்கள் அங்கு சிதைந்து பொருளற்று போகின்றன.... மிகைப்படியான அன்பு உரிமையாகிறது... உரிமை உறவை வரவாக பெற துடிக்கிறது... சிறு குழந்தையாக மாறி சிணுங்குகிறது... தமக்குரியவர் மீது பிறர் அன்பு செலுத்துகையில் பொங்கி எழுந்து போராடுகிறது... தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள மனதோடு மன்றாடுகிறது... அப்படியான அன்பு உள்ளம் ஒன்று உங்களுக்கு கிடைத்து விட்டால் அதை பொக்கிஷமாய் பாதுகாத்திடுங்கள்... கை நீட்டி ஓடி வரும் குழந்தை போன்ற அதை தட்டிவிட்டு கடந்து செல்லாதீர்... தொலைத்து விட்டு தேடி திரியாதீர்... பின்னாளில் அது கிடைக்காமலும் போகலாம்... உண்மை அன்பை உதாசினபடுத்தி எந்திரம் போல் வாழ்வதை பெருமையாக நினைத்து மனதை மறுத்து போன கல்லாக்காதீர்... உங்களுக்காக உண்மையாக ஒரு துளி கண்ணீரை அன்பாக பரிசளிக்கும் ஓர் உறவு அமைந்து விட்டால் வாழ்வில் வெற்றி அடைந்ததாக உணரலாம்.. அத்தகைய அன்பு மனதை மென்மையாக்குவதோடு வலிமையுமாக்கும்... வலிமை வளமாக்கி மனதை தெளிவுபடுத்தி வாழ்வை வசந்தமாக்கும்...
"மிகைப்படியான அன்பு உரிமையாகிறது... உரிமை உறவை வரவாக பெற துடிக்கிறது... சிறு குழந்தையாக மாறி சிணுங்குகிறது... தமக்குரியவர் மீது பிறர் அன்பு செலுத்துகையில் பொங்கி எழுந்து போராடுகிறது... தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள மனதோடு மன்றாடுகிறது"இந்த வார்த்தையில் ஒரு அழகும் நல்ல உணர்வோடு கூடிய உயிரும் உள்ளது.. நல்ல படைப்பு ��
ReplyDelete