Friday, September 28, 2018

பெண்மையின் வலி (மை)

பெண்மையின் வலி (மை) உணர்ந்திடுங்கள் தோழர்களே... பெண்கள் என்ற பதம் போக பொருளல்ல.. அவள் ஒரு தாய் , தாரம், சகோதரி, தோழி, காதலி என பல பரிணாமங்களில் உங்களுடன் வியாபித்திருக்கும் ஓர் உறவு... தாயின் வழி தோன்றி சகோதரிகளுடன் கூடி பிறந்தும் கூட பெண்மையின் மென்மையை உணராமல்... சொல்லால் அவள் உணர்வினைகாயப்படுத்தி அதனால் பலன் காணமுடியுமா...
    பெண் என்றால் காமம் மிளிர்ந்த ஓர் உருவம் மட்டும் கண்களில் தெரியுமா...யார், என்ன, எப்படி என அறியாமலேயே வீசப்படும் வார்த்தைகள் அவர்கள் தாய்க்கும், சகோதரிக்கும், மனைவிக்கும், மகளுக்கும் யார் மூலமாகவோ வந்து சேரும் என்பதை உணர்வார்களா...
    பெண் ஓர் அட்சய பாத்திரம்... கள்ள மற்ற அன்பை காட்டுங்கள் அவள் ஆயிரம் மடங்கு அன்பை அர்பணிக்க காத்திருப்பாள்... மாறாக அனல் கக்கும் வார்த்தைகளால் போகம் போக்கும்  உணர்வோடு விளையாடும் மிருகங்களை என்ன செய்ய ... அஞ்சி ஓடி ஒளிய வேண்டுமா.. மூலையில் முடங்கி அழ வேண்டுமா..
   பெண் முன்னேற்றம், பெண் சுதந்திரம் என்பது எதில் எழுந்துள்ளது... சமூக வலைதளத்தில் கண்ணியமான போர்வை போர்த்திக் கொண்டு.. தனிமையில் தவறாக பேசுவதிலா.... ஆண் பெண் வேறுபாடின்றி நட்பின் திறனையும் சிந்தனை சிரத்தையும், அன்பின் வலிவையும் அறியும் இடத்தில் அற்ப உணர்வுகளால் காயப்படுத்த உலாவும் மிருகங்களை கண்டு மனம் கொதிக்கிறது...
  ஆண்கள் அனைவரும் தவறானவர்கள் அல்ல... உற்ற தோழியாக ' உடன் பிறவா சகோதரியாக கள்ள மற்ற அன்பில் கரைந்து போதும் உள்ளம் ஏராளம்... அதில் புல்லுருவியாக , பூந்தோட்டத்தில் விசசெடியாக சில அற்ப உள்ளங்கள் அங்கும், இங்கும் அலைந்து திரிகிறது...ஒரு பெண்ணிடம் தவறாக பேசி அவள் அன்பை பெற முயற்சிப்பதை விட... குழந்தை உள்ளத்தோடு பழகி பாருங்கள் அன்பின் வடிவாய் அவள் ஒளிர்வதை உணரலாம்..... அவள் தேகம் பார்த்து முரணாகாமல் ... அவள் உள்ளம் கண்டு நலம் காக்கும் அரணாகுங்கள்... ஒரு பெண்ணிடம் கண்ணியம் காப்பதே ஆடவர் இலக்கணம்.... தனிப்பட்ட முறையில் தகாத வகையில் பேசப்படும் சில வார்த்தைகளால் அவள் மனம் குமறும் தீயில் அந்த அற்பங்களின் ஆண்மையும், வீரமும் வீழ்ந்து மாளும் என்பதே உண்மை... ஆணோ பெண்ணோ வலிமையான நட்பை தாருங்கள்.... நட்பென்ற போர்வையில் நஞ்சை ஊட்டி வலியை தராதீர்... பெண்மையை மதிக்காவிடினும்... அவள் மென்மையினை மிதிக்காதீர்!!!!!

Tuesday, September 25, 2018

அன்பின் வலிமை..

அன்பின் வலிமை...அன்பின் வலிமை என்னவென்றால்.... பணம், பதவி, இனம், வயது, நிறம், நாடு இன்ன பிற என எதுவும் மறந்து நம்மை ஒரு குழந்தையாய் கூட்டுக்குள் அடைப்பதுதான்... உண்மை அன்பு எதையும் எதிர்பாராதது... அதற்கு உருவம் கிடையாது... உணர்வு மட்டுமே... அதற்கு தேடுதல் கிடையாது... திடிரென உள்ளுக்குள் ஊற்றாய் பெருகும்... அதற்கு முகவரியும் இல்லை... முகவுரையும் இல்லை.. முடிவுரையும் இல்லை... யார் மீது , எதற்காக, ஏன் என்ற பதங்கள் அங்கு சிதைந்து பொருளற்று போகின்றன.... மிகைப்படியான அன்பு உரிமையாகிறது... உரிமை உறவை வரவாக பெற துடிக்கிறது... சிறு குழந்தையாக மாறி சிணுங்குகிறது... தமக்குரியவர் மீது பிறர் அன்பு செலுத்துகையில் பொங்கி எழுந்து போராடுகிறது... தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொள்ள மனதோடு மன்றாடுகிறது... அப்படியான அன்பு உள்ளம் ஒன்று உங்களுக்கு கிடைத்து விட்டால் அதை பொக்கிஷமாய் பாதுகாத்திடுங்கள்... கை நீட்டி ஓடி வரும் குழந்தை போன்ற அதை தட்டிவிட்டு கடந்து செல்லாதீர்... தொலைத்து விட்டு தேடி திரியாதீர்... பின்னாளில் அது கிடைக்காமலும் போகலாம்... உண்மை அன்பை உதாசினபடுத்தி எந்திரம் போல் வாழ்வதை பெருமையாக நினைத்து மனதை மறுத்து போன கல்லாக்காதீர்... உங்களுக்காக உண்மையாக ஒரு துளி கண்ணீரை அன்பாக பரிசளிக்கும் ஓர் உறவு அமைந்து விட்டால் வாழ்வில் வெற்றி அடைந்ததாக உணரலாம்.. அத்தகைய அன்பு மனதை மென்மையாக்குவதோடு வலிமையுமாக்கும்... வலிமை வளமாக்கி மனதை தெளிவுபடுத்தி வாழ்வை வசந்தமாக்கும்...

Monday, September 24, 2018

எண்ணத்தின் உயர்வு ...

உயர்வான எண்ணம் வளர்த்திடுவோம்.... எண்ணம் உயர்ந்தால் எதுவும் உயரும் ... தாழ்ந்த எண்ணங்களால் நம்மையும்  தாழ்த்திக் கொண்டு மற்றவர்களையும் துன்புறுத்த கூடாது.... உயர்ந்த எண்ணம் தன்னம்பிக்கையையும், முயற்சியையும் துணை சேர்த்து வெற்றியை பெற்று தரும்...புலம்புவதோ, பிறர் கருணையை பெற முயற்சிபதோ நம்மை தனித்து செயல்படவிடாது.... இறுதி வரை யாரையேனும் சார்ந்து வாழு(டு)ம் சூழலுக்கு தள்ளிவிடும்.... நம்மை பற்றி நமக்கே ஒரு உயர்ந்த சிந்தனை வரவேண்டும்.... யாருடைய பிரதிபலிப்பாகவோ நகலாகவோ நாம் இருக்க கூடாது... நாம் நாமாக இருக்க வேண்டும்... நமக்கென்று தனிப் பாதை வகுக்க வேண்டும்... பிறரோடு ஒப்பீடு எல்லை மீறி செல்ல கூடாது... யாரோ ஒருவருக்கு நேர்ந்ததுன்பத்தையோ, துயரத்தையோ கண்டு முற்றிலும் வாழ்வை வெறுமையாக நினைக்க கூடாது... நமக்கான வாழ்வு சரித்திரம் எழுதபட்டு கொண்டிருக்கும் அதை சரியான பாதையில் பயணிக்க செய்வது நம் எண்ணங்களே...
       சிலருக்கு துன்பமானதாக அமைந்த வாழ்வு மற்றவருக்கு இன்பமாகிறது... இதன் சாரம் எண்ணமே... எண்ணத்தின் தெளிவும், உயர்வும் எதையும் ஏற்றுக்கொள்ளும் நிறைவை தருகிறது ... பிறர் பற்றிய ஒப்பீட்டில் வாழ்வை புறக்கணிப்பவர் கோழைகளே... தன்னை பற்றிய உயர்ந்த எண்ணம், ஆற்றலின் மீதான நம்பிக்கை எல்லாம் நம்மை உயர்த்தும்... பிறரை உதாரணமாக பார்த்து நகல் எடுக்காமல் நாமே உதாரணமாக மாறும் அளவிற்கு உயர்ந்த எண்ணம் வளர்க்க வேண்டும்... நமக்கு நாம் தான் நண்பன், குரு எல்லாமே ... தன்னம்பிக்கை எண்ணம் இழந்து விட்டால் எத்துணை துணை இருந்தாலும் தனித்து வினை ஆற்ற இயலாமல் பிணை கைதிபோல் அடைபட நேரிடும்.... உயர்ந்த எண்ணம் வளர்த்து எண்ணியதை திண்ணமாக செயலாற்றும் போது வண்ணமான வாழ்வை பெறலாம்...

கிராமத்தில் ஓர் நாள்....

பயணங்களில் சில மட்டுமே நினைவு சுவடுகளாக மாறி அசை போட வைக்கின்றன... நகரத்தின் சாயலை கடந்து கிராமத்தின் வாயலுக்கு பயணம் மேற்கொள்ளும் போது அது ஒரு சுகமான அனுபவமாக மாறி விடுகிறது... பேருந்தின் சன்னலோர இருக்கை கிடைப்பது ஒரு வரம்... அதிலும் அதன் வழி இயற்கையை காணும் போது அது மாபெரும் வரமாக உருபெறுகிறது... பசுமை படர்ந்த அடர்ந்த மரத்தில் செக்க சிவந்த அழகிய மலர்கள்.. சாலையோரம் பூத்துக்குலுங்கும் பல வண்ண மலர்கள்... மலர்களே மயங்கி நோக்கும் படி பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள் .. இவை அழகிலும் அழகு... யாவர்க்கும் அன்னையாக விளங்கும் பசு தன் கன்று துள்ளி விளையாடுவதைக் கண்டு களிப்புடன் பாதி புல்வாயில் வைத்தப் படி மெல்லவும் விழுங்கவும் இயலாதவாறு மெய் மறந்து நிற்கும் காட்சி... சீருடை அணிந்த இராணுவ வீரனை போல மிடுக்குடன் வைக்கோல் மீது நிற்கும் சேவல் ... தன் குஞ்சுகளுக்கு இரை ஊட்டும் முனைப்பில் பசி மறந்த கோழிகள்... தென்றல் காற்றின் தழுவலால் தலையசைக்கும் வயல்வெளி பயிர்கள்.. பச்சை பயிர்கள் தன்னை தான் அழைக்கிறதோ என நினைப்பில் அதன் அருகே ஓடும் பறவைகள்... இதை கண்ட தென்னை மரம் நகைப்பது போல் பலமாக தலை அசைக்கும் காட்சி.. அதன் அசைவால் தேங்காய்கள் விழ அதைக் கண்டு மர நிழலில் ஓய்வுக்காக படுத்திருந்த ஆட்டுக்குட்டிகள் ஓட்டம் பிடிக்கும் காட்சி...காற்றில் வெடித்து பறக்கும் பருத்திக்காய்கள் வெண்மேகம் கீழே இறங்கி வந்தது போல தோன்றும் அற்புதக் காட்சி.. நிறை மாத கர்பிணி போல பரிவு கொள்ள வைக்கும் குழை தள்ளிய வாழை மரங்கள்... எது நடந்தால் எனக்கென்ன என்று ஓரமாய் படுத்து அசைப்போடும் பொறுமையின் சிகரமாம் எருமை மாடுகள் ... இவ்வாறு ரசிக்க எத்தனை எத்தனை... பயணத்தின் நிறைவாய் கிராமத்தின் எல்லை முடிந்து நகரத்தின் தொல்லையாம் இரைச்சலும் , நெரிச்சலும் வரவேற்க பேருந்து முன்நோக்கி பயணிக்க .. என் மனம் மட்டும் மீண்டும் பின் நோக்கியே பயணிப்பது ஏனோ ...

தாழ்வு மனப்பான்மை

தாழ்வு மனப்பான்மை ... அது என்ன தாழ்வு மனப்பான்மை .. எதற்காக தாழ்வு மனப்பான்மை ... தன் எடையை காட்டிலும் எட்டு மடங்கு எடையை தூக்கி கொண்டு சென்று வருங்கால வாழ்வுக்கு சேர்த்து வைக்கும் எறும்பிடம் இல்லை தாழ்வு மனப்பான்மை ... யார் உதவியும் இன்றி மிகச் சிறந்த பொறியாளர் போல கூடு கட்டும் சிறு தூக்கணாங்குருவியிடம் இல்லை தாழ்வு மனப்பான்மை .. எத்தனை முறை விழுந்து எழுந்தாலும் மீண்டும் தன் வலையை  பின்னி முடிக்கும் சின்னஞ் சிறுசிலந்தியிடம் இல்லை தாழ்வு மனப்பான்மை ... பல்வேறு பூக்களில் இருந்து தேனை சேகரித்து தேன் கூட்டினை வடிவமைக்கும் தேனியிடம் இல்லை தாழ்வு மனப்பான்மை .. இவைகளுக்கு இருப்பது தன்னம்பிக்கை... இவைகளை விட பன்மடங்கு உடலும், உள்ளமும் பலம் வாய்ந்த மனிதர்களுக்கு ஏன் தாழ்வு மனப்பான்மை .. முடியும் என்ற வார்த்தைக் கொண்டு வாழ்க்கையின் வளர்ச்சிக்கு வழியை தேடுவோம்... இயலும் என்ற வார்த்தையால் இனிமையை கூட்டுவோம்... தன்னம்பிக்கை எனும் சுடர் கொண்டு தாழ்வு மனப்பான்மை எனும் இருளை மருள் அடைய செய்வோம்... பணமோ, பதவியோ, அழகோ எதும் நிரந்திரம் இல்லாத போது அதைக் கொண்டு தாழ்வு மனப்பான்மை ஏனோ... இருப்பதைக் கொண்டு சிறப்பு செய்து தனக்கென ஒரு திறமையை வளர்த்துக் கொண்டால் தாழ்வு மனப்பான்மை தலை கவிழ்ந்து ஓடுவதைக் காணலாம்...

காதல் நிலை

     இணைந்திருந்து காணும் போது...
இல்லாத காட்சி கூட இருப்பது போல் தோன்றும்...
காணாத காட்சி கூட கலை வடிவாய் தோன்றும்...
ஊதாத குழலும் இன்னிசையை வழங்கும்...
பேசாத மெளனம் கூட பேருரையாய் முழங்கும்...
பாலை நிலத்திலும் முப்போகம் விளையும்...
வெண்மேகம் கூட அடை மழையை பொழியும்...
இது காட்சி பிழையல்ல...
இதயத்தால் பின்னப்பட்ட காதல் வலை...

Sunday, September 23, 2018

கடவுச் சீட்டு

"திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு" என்பார்கள்.. ஆனால் திரைக்கடல் தாண்டி செல்வதே செல்வங்கள் தான் என்பதை யார் அறிவார்... வெளிநாட்டு வாழ்க்கை வெளியில் பார்ப்பதற்கு அழகாகவும், மகிழ்வாகவும் இருப்பது போல தோன்றினாலும் உண்மையில் அது அப்படி அல்ல... வீடு, உறவு, மொழி, நட்பு, நாடு அனைத்தையும் தாண்டி மனதை தன் சொந்த மண்ணிலே அழவிட்டு... வெற்று உடலோடு பயணம் செய்யும் வலி அத்தகைய உள்ளங்களுக்கே வெளிச்சம்... "வெளிநாட்டு பணம் புது நகை மின்னுகிறது" இது அவன் மனைவி தினமும் காதில் வாங்கும் சொல்... பொன்னகை அணிந்திருப்பாள்.. அவள் புன்னகையை தொலைத்திருப்பது யாருக்கும் தெரியாது... கைபேசியின் செல்லமுத்தத்தை உணர்வுடன் பெற முடியாத குழந்தைகள்... பிற குழந்தைகள் தந்தையுடன் விளையாடுவதை பார்த்து தவிப்பது பிறருக்கு புரியாது...
   "அவருக்கென்ன குறைச்சல் மகனுக்கு வெளிநாட்டு வேலை " அவன் தந்தை அனுதினம் ஒரு முறையேனும் கேட்கும் வார்த்தை... தன் மகன் சிறு வயதில் பயன்படுத்திய விளையாட்டு பொருள் முதல் ஒவ்வொன்றையும் ஏக்க பார்வை பார்த்து செல்லும் அவரது துடிப்பு யாருக்கும் தெரியாது... தன் மகனுக்கு என்ன பிடிக்கும் என தேடி தேடி அன்பு கலந்து சமைத்த உணவை விட்டு என்ன உண்டானோ என தினம் உண்ணாமல் தவிக்கும் தாயின் மனநிலை யார் அறிவார்...
    துளிரும் வயதில் வாடிடும் குழந்தை... கனவில் வாழ்வு நடத்தும் மனைவி ... செல்ல சண்டை போட்டு சிரித்து மகிழ்ந்த உடன் பிறந்தோர்... தள்ளாத வயதில் தவித்திருக்கும் தாய் தந்தையர் யாவரையும் பிரிந்து வாடும் அவன் கைபேசியில் உரையாடும் போது தனக்கென ஒரு மிடுக்குடன் பேசினாலும் உண்ண உணவும், எண்ணம் பகிரமொழியும் இன்றி வாடுவது யார் அறிவார்... விழாக்கள் புறக்கணிப்பான்... அதை எண்ணி ஏங்கி தவிப்பான்.... இறப்பை புறக்கணிப்பான் அதை எண்ணி உள்ளுக்குள் அழுவான்... உடல் நலம் கெடுகையில் தாய் மடி தேடி அலையும் உள்ளத்தை எண்ணி குமறுவான்... ஏக்கம் நிறைந்த கண்கள் நோக்குவது நாட்காட்டியின் நாட்கள் நகரும் வேகத்தை ... சொந்த ஊர் திரும்பும் நேரத்தை .... "திரைக்கடல் ஓடியும் திரவியம் தேடு" என்பார்கள்.. ஆனால் திரைக்கடல் தாண்டி செல்வதே செல்வங்கள் தான் என்பதை யார் அறிவார்... வெளிநாட்டு வாழ்க்கை வெளியில் பார்ப்பதற்கு அழகாகவும், மகிழ்வாகவும் இருப்பது போல தோன்றினாலும் உண்மையில் அது அப்படி அல்ல... வீடு, உறவு, மொழி, நட்பு, நாடு அனைத்தையும் தாண்டி மனதை தன் சொந்த மண்ணிலே அழவிட்டு... வெற்று உடலோடு பயணம் செய்யும் வலி அத்தகைய உள்ளங்களுக்கே வெளிச்சம்... "வெளிநாட்டு பணம் புது நகை மின்னுகிறது" இது அவன் மனைவி தினமும் காதில் வாங்கும் சொல்... பொன்னகை அணிந்திருப்பாள்.. அவள் புன்னகையை தொலைத்திருப்பது யாருக்கும் தெரியாது... கைபேசியின் செல்லமுத்தத்தை உணர்வுடன் பெற முடியாத குழந்தைகள்... பிற குழந்தைகள் தந்தையுடன் விளையாடுவதை பார்த்து தவிப்பது பிறருக்கு புரியாது...
   "அவருக்கென்ன குறைச்சல் மகனுக்கு வெளிநாட்டு வேலை " அவன் தந்தை அனுதினம் ஒரு முறையேனும் கேட்கும் வார்த்தை... தன் மகன் சிறு வயதில் பயன்படுத்திய விளையாட்டு பொருள் முதல் ஒவ்வொன்றையும் ஏக்க பார்வை பார்த்து செல்லும் அவரது துடிப்பு யாருக்கும் தெரியாது... தன் மகனுக்கு என்ன பிடிக்கும் என தேடி தேடி அன்பு கலந்து சமைத்த உணவை விட்டு என்ன உண்டானோ என தினம் உண்ணாமல் தவிக்கும் தாயின் மனநிலை யார் அறிவார்...
    துளிரும் வயதில் வாடிடும் குழந்தை... கனவில் வாழ்வு நடத்தும் மனைவி ... செல்ல சண்டை போட்டு சிரித்து மகிழ்ந்த உடன் பிறந்தோர்... தள்ளாத வயதில் தவித்திருக்கும் தாய் தந்தையர் யாவரையும் பிரிந்து வாடும் அவன் கைபேசியில் உரையாடும் போது தனக்கென ஒரு மிடுக்குடன் பேசினாலும் உண்ண உணவும், எண்ணம் பகிரமொழியும் இன்றி வாடுவது யார் அறிவார்... விழாக்கள் புறக்கணிப்பான்... அதை எண்ணி ஏங்கி தவிப்பான்.... இறப்பை புறக்கணிப்பான் அதை எண்ணி உள்ளுக்குள் அழுவான்... உடல் நலம் கெடுகையில் தாய் மடி தேடி அலையும் உள்ளத்தை எண்ணி குமறுவான்... ஏக்கம் நிறைந்த கண்கள் நோக்குவது நாட்காட்டியின் நாட்கள் நகரும் வேகத்தை ... சொந்த ஊர் திரும்பும் நேரத்தை .... கடவுச் சீட்டை சுமந்துக் கொண்டே கடந்து செல்கிறது அவனது இயல்பு வாழ்க்கை....

ஆறுதல் மொழி

         ஆறுதல் மொழி வழங்க பழகுவோம்... 
   பிறர் துன்பத்தை வேறு வகையில் சரி செய்ய இயலாவிடினும் ஆறுதல் மொழியாலே தேறுதல் செய்வோம்... பிறர் துன்பம் கண்டு எள்ளி நகைக்காமல்...புறக்கணித்து செல்லாமல் ... ஆறுதல் கூறுங்கள்... இந்த உலகம் பரபரப்பாக இயங்கிக் கொண்டு மிடுக்காக திரிந்தாலும் யாவரும் எதிர்பார்ப்பது இனிய ஆறுதலான வார்த்தைகளை தான்... அது புண்பட்ட உள்ளங்களுக்கு மாபெரும் மருந்து... ஆறுதல் மொழிகளும் தேறுதல் வார்த்தைகளும் துன்ப நிலையை பாதியாய் குறைக்கும்....
         வாழ்வு ஒரு வட்ட பாதை இதில் இன்பம் துன்பம் இரண்டையும் கடந்தே யாவரும் பயணிக்க வேண்டும்... ஒரு சில நேரங்களில் பிறரின் சோக சரித்திரம் கூட மற்றவருக்கு ஆறுதலாகும்... உள்ளம் என்பது எல்லையில்லா எண்ணங்களில் விரிவடைந்துக் கொண்டே முடிவிலா பயணம் செய்வது.... அது முடிவில் எதிர்பார்ப்பது ஆறுதலைதான்... துன்பத்தின் உச்சத்தில் வேகத்தில் செல்லும் மனதிற்கு வேகதடையாக ஆறுதல் மொழி அமைந்து தேற்றி வெற்றி பாதைக்கு வழிகாட்டும்... கனிவான மொழி கண்ணீரை துடைத்திடும்... ஆறுதல் மொழி அன்பை வளர்த்திடும்....
           எத்தகைய கடின மனதிற்குள்ளும் கை நீட்டி அழுது ஆறுதல் தேடும் குழந்தை ஒன்று அலைந்துக் கொண்டு தான் இருக்கும் ... அதுவே உண்மை... அதை தூக்கி சமாதானம் செய்யுங்கள்... கடின மனதும் மென்மையாக மாறுவதை உணரலாம்...
Image may contain: 1 person

காதல் கலை

அவள் வாட்டத்துடன் காத்திருக்க!!
அவன் ஓட்டமாய் ஓடி வர!!
அவளது காத்திருந்த கண்கள் தெளிவு பெற!!
அவனது பட படத்த இதயம் அமைதி பெற!!
ஏக்கத்தில் காத்திருந்த அவள் மூச்சும்!!
வேகத்தில் விரைந்து வந்த அவன் மூச்சும்!!
ஒன்றென கலந்து மாலைத் தென்றலை வெப்ப சலன மாற்றம் செய்தாலும்!!
பொங்கி வரும் அன்பின் வெள்ளம் குளிரூட்டி சீர் செய்வது!!
காலநிலையின் மாற்றமா!!
காதல் கலையின் தோற்றமா!!
Image may contain: flower, plant, bird, nature and outdoor

Saturday, September 22, 2018

நட்பு இலக்கணம்

எதிரிக்கோ!!நட்புக்கோ!!இலக்கணம் எழுதி வைக்கப்படவில்லை... எதிரியும் நண்பனாகலாம்.. நண்பனும் எதிரி ஆகலாம்... நிரந்தரமற்ற வாழ்வில் இது தான் என அறுதியிட்டு கூறிட எதுவும் இல்லை... சூழலோடு ஒன்றி அதே நேரத்தில் கட்டுப்பாடோடு வாழ கடமைப்படுவோம்... யார் மீதும் அதிக எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் அளவு கடந்த அன்பையும் வைத்திடல் ஒரு வித முட்டாள் தனமும் கூட... அன்பு கொண்ட இதயங்களில் அடிக்கடி நிகழும் நிகழ்வு இது.. ஆனால் இந்த எதிர்பார்ப்பு அதிக நேரம் ஏமாற்றமே தரும்... யார் மீதும் அதிக வெறுப்பும் ஏற்பட்டு விட கூடாது.. அவர்களும் திருந்தி திரும்ப வரலாம்... அன்பு குறைந்திடும் நிலையில் அதை வற்புறுத்தி கட்டாயமாக பெறுவது.. இனித்திருந்த கனியை கசக்கி எடுத்து நசுக்கிவிடுதல் போல.. அவ்வாறு கட்டாயத்தில் பேரில் பெறப்படுவது அன்பும் அல்ல.. எதிர்ப்பையும் வஞ்சம் வைத்து பழி தீர்க்க துடிக்க கூடாது... நிகழும் எதுவும் நன்மைக்கே என்ற கோட்பாடோடு வாழ்வை நிகழ்த்தி செல்லும் மனப்பான்மையை வளர்த்திக் கொள்ள வேண்டும்... எதுவும் கடந்து போகும் அதுவே வாழ்க்கை... நாம் எதை எதிர்பார்த்தாலும், அன்பு செய்தாலும், ஆசைப்பட்டாலும், எதிர்ப்பு காட்டினாலும் நடக்கும் நிகழ்வுகள் நடந்தே தீரும் எனற வாழ்வின் உச்சக்கட்ட நிலையை உணர்ந்துக் கொண்டால்.. இவை அனைத்தும் பொருளற்றதாக தெரிவதை உணரலாம்... முக்கியத்துவம் இல்லாத சிலவற்றை மூளைக்கு கொண்டு செல்லாமல் ... அமைதியும் , தெளிவுமான சிந்தனையை வளர்த்துக் கொள்வோம்... அந்த மனநிலை நம்மையும் உயர்த்தி நம்மை சார்ந்த யாவையும் உயர்த்தும்..

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கையை வளர்த்திட முனைவோம்... தன்னம்பிக்கையும் சுயசார்பும் தான் வாழ்க்கையை முன்னேற்ற பாதைக்கு இட்டு செல்லும்.. யாரும் இல்லை என புலம்பும் ஒரு சாரார்... இருந்தும் பயனில்லை என புலம்பும் மற்றொரு சாரார்... நம்மை தவிர யாரும் நம்மை புரிந்துக் கொள்ள முடியாது.. நமது திறமை என்ன.. நாட்டம் என்ன.. வலு என்ன.. எதை நோக்கி சென்றால் ஒளிரலாம் என பிறரால் கூற இயலாது.. சுயசார்பும் தன்னம்பிக்கையும் நமக்குள் எழும் வினாக்களுக்கு பதிலளித்து நம்மை முன்னேற்றி செல்லும்.. உலகில் உயர்ந்து வரலாற்றில் இடம் பிடித்த அனைவரும் யாரையும் சார்ந்திராத சூழலில் வளர்ந்தவர்களே.. அவர்களால் மட்டுமே தன்னை உயர்த்திக் கொள்ள முடியும்.. பிறரை சார்ந்திருப்பவர்கள் கூட்டுக்குள் அடைப்பட்ட பறவை போன்றவர்கள்... தற்சார்பு சிந்தனை கொண்டவர்கள் காட்டில் வளரும் பறவை போன்றவர்கள்.. சுதந்திர உணர்வையும் தற்சார்பு சிந்தனையே உருவாக்கும்... பறவைகளில் மற்ற பறவைக்கும் கழுகுக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு... அது தன்னம்பிக்கை மிக்கது... மழை வந்தால் மற்ற பறவைகள் கூட்டைத் தேடி ஓடும் கழுகு உயர பறந்து மழை மேகங்களுக்கு மேலே செல்லும்... தோல்வியை கண்டு துவளாது.. இயற்கையாக எய்தும் முதுமையைக் கூட வென்று மறுபிறவி எடுக்கும்.. முதுமையுற்ற தனது இறகுகளையும் , நகங்களையும் தானே சிரமபட்டு அகற்றிவிட்டு மீண்டும் புது சிறகுடன் மறுபிறவி எடுக்கும்... தன்னம்பிக்கையின் சின்னமாக விளங்கும்... அது போல தான் தன்னம்பிக்கை கொண்டவர்களின் வாழ்வும் ... ஆதரவு இல்லாதவர்களே ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்த இயலும்... சோதனைகளையும் சாதனைகளாக மாற்ற இயலும்...புலம்பி வாழ்நாளை வீணாக்கி கூட்டுக்குள் முடங்காமல் தன்னம்பிக்கை எனும் சிறகை விரித்து பறந்திடுவோம்.. நம்மால் ஒரு புது உலகம் படைக்கப்படுவதை உணரலாம்.