மறதி என்பது வரமா? சாபமா?!!!!!
மறதி என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் பல மனங்கள் ஆறாத ரணமாகவே இருந்திருக்கும்... மறந்து விட கூடாது என சில நினைவுகளும் மறந்து விட வேண்டும் என சில நினைவுகளும் அனைத்து மனங்களிலும் இருக்கும்...
ஏற்பட்ட காயங்கள், பறிக்கப்பட்ட இழப்புகள், மறைக்கப்பட்ட ரகசியங்கள் மறக்கும் போது தான் பட்ட மரமாகி போன மனம் புதுமையை நோக்கி துளிர் விடும்... மறதி இல்லையெனில் அது எப்போதோ மண்ணோடு மக்கியிருக்கும்... மறதி ஒன்றே மனதை மீட்டு மறுபிறவி எடுக்க செய்து புதுவித பயணத்திற்கு வழிகாட்டும்... மறதி இல்லை எனில் மரணித்த இதயங்களின் கூடமாக உலகம் மாறியிருக்கும்... இத்தகைய நிலையில் மறதி என்பது ஒரு வரமே....
அதே வேளையில், அன்புக்குரிய மனங்களில் நம் நினைவுகள் அழிந்து மறதி ஏற்படும் போதும், மறக்க கூடாத பொற்கால நினைவுகள் நம் மனம் விட்டு போகும் போதும் அது சாபம் என தோன்றும்....
எதுவாகினும் மறதி போற்றுதலுக்குரியதே .. அது பகையை ஆற்றி பழிவாங்கும் எண்ணத்தை குறைக்கும்... உறவை தேற்றி உடைந்த மனதை ஒட்ட வைக்கும்... தோல்விகளால் ஏற்பட்ட காயங்களுக்கு மருந்தாக மாறி வெற்றி எனும் விருந்தை ஊட்டும்...
மறக்கவேண்டியவற்றை மறந்து இறந்த கால நிகழ்வை எண்ணி வருந்தாமல் வருங்காலத்தை வசந்தமாக்குவோம்..

No comments:
Post a Comment