Friday, November 2, 2018

வாய்ப்பு

    வாய்ப்புகளை தேடாமல் உருவாக்க கற்றுக் கொள்ளோம்!!!
பெரும்பான்மையோர் வாழ்வு வாய்ப்பு தேடி அலைவதிலேயே முற்றுப் பெறுகிறது... பணம் இல்லை, பிறர் ஆதரவு இல்லை, நல்ல சூழல் இல்லை என புலம்பி ஆயுளை கடத்துபவர் பலர்...
வெற்றியின் சரித்திரத்தை புரட்டி பார்த்தால் அமைந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டவர்களை விட .. தனக்கென வாய்ப்பை ஏற்படுத்தி கொண்டவர்களே அதிகம் இருப்பார்கள்... இயலாது என்ற வார்த்தைக்குள் முடங்காமல் எந்த சூழலையும் தனக்கேற்ப மாற்றி மகிழ்வுடன் ஏற்பவர்களே சாதனையாளர்கள்...
த்தகைய மனம் படைத்தவர்கள் திறமையும், எதையும் தாங்கும் வலிமையையும் அதிகம் பெற்றிருப்பர்... யாரும் பாதுகாக்காத காட்டுமரம் வலிமையோடு வளர்தலை போல தானே வலிமையோடு வளர்ந்து நிற்பர்....
மகிழ்ச்சி நம்மிடமே உள்ளது.. அதை வெளியில் தேடாமல் நமக்கு கிடைத்ததைக் கொண்டு அதை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும்... வாய்ப்புகளை யாசகமாக பெற்று அடிமையாகாமல்.. தானே உருவாக்கி தலைமை பண்போடு மிளிர முயல்வோம்..

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், அமர்ந்துள்ளார் மற்றும் வெளிப்புறம்

No comments:

Post a Comment